பக்கங்கள்

பக்கங்கள்

29 அக்., 2012


மலேசியாவுக்குள் நுழையும் இலங்கையர்களுக்கு “பயோ-விஸா” முறை
விஸ் மோசடிகளைத் தடுக்கும் முகமாக மலேசியாவுக்குள் நுழைவதற்கு இலங்கையர்களுக்கு 'பயோ – விஸா' முறைமை தேவை என அந்நாட்டு குடிவரவு திணைக்களம் அறிவித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் 'பயோ – விஸா' முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மலேசியாவில் இத்திட்டமானது எதிர்வரும் நவம்வர் மாதம் 1ஆம் திகதி நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சீனா, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் மியன்மார் உள்ளிட்ட நாடுகளும் இந்த 'பயோ – விஸா' முறைமைக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டவர்களின் கைவிரல் அடையாளம் தூதரகங்களினால் உறுதிப்படுத்தப்படும். அத்துடன் மலேசியாவுக்குள் நுழையும் போதும் அந்த கைவிரல் அடையாளம் உறுதிப்படுத்தப்படும்.
பாதுகாப்பு முறைமைகளுக்கு அமைவாக பெற்றுக்கொள்ளப்படும் கைவிரல் அடையாளமானது கடவுச் சீட்டிலுள்ள தரவுகள் மற்றும் தனிப்பட்ட தரவுகளுடன் ஒத்துப்போக வேண்டும்.
மலேசியாவுக்கு சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பெருந்தொகையானோர் சுற்றுலாப் பயணிகளாக வருகை தருவரை அடுத்தே இந்த 'பயோ – விஸா' முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மலேசியாவின் குடிவரவு திணைக்கள பணிப்பாளர் நாயகம் அலைஸ் அஹமட் தெரிவித்துள்ளார்.