பக்கங்கள்

பக்கங்கள்

18 அக்., 2012

தமிழ் சொந்தங்கள் செத்து விழுந்த போது இளையராஜா குரல் கொடுக்கவில்லை; சீமான் குற்றச்சாட்டு
தமிழ் சொந்தங்கள் செத்து விழுந்த போது உணவுக்கோ, மருந்துக்கோ, துணிக்கோ இந்த இளையராஜா கச்சேரி நடத்தி உதவி செய்ய முன்வரவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
முள்ளிவாய்க்காலில் கடைசி நேரத்தில் நடேசன் வெள்ளைக் கொடியுடன் போன போது அவரை சுட்டு கொன்றார்கள். இதை பார்த்து சிங்களப் பெண் நடேசன் மனைவி சிங்களத்தில் அவர்களிடம் நியாயம் கேட்டார்.

அவரையும் கற்பழித்து கொன்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தனை காலமும் வெளிநாடுகளுக்கு சென்று கச்சேரி நடத்தாத இசையமைப்பாளர்  இப்போது தமிழனின் விடுதலை நெருப்பை நீர்ந்திப் போக நடத்தப்படும் இசை நிகழ்ச்சி எனக் கூறுகிறார்..

தமிழ் சொந்தங்கள் செத்து விழுந்த போது உணவுக்கோ, மருந்துக்கோ, துணிக்கோ இந்த இளையராஜா கச்சேரி நடத்தி உதவி செய்ய முன்வராமை வருத்தம் அளிக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2016 ல் புதிய அரசியல் வரலாறு படைப்போம் என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டம் புதுக்கோட்டை இடம்பெற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.