பக்கங்கள்

பக்கங்கள்

31 அக்., 2012


டெசோ தீர்மானங்களுடன் ஸ்டாலின், டி,ஆர் பாலு ஆகியோர் இன்று மாலை ஐநா பயணம்!
இலங்கைத் தமிழர்களின் நலனை வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் மாதம்  தி.மு.க. வினால்  நிறைவேற்றப்பட்ட டெசோ தீர்மானங்கள் அடங்கிய அறிக்கையுடன் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க.நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் இன்று நியூயோர்க் பயணமாகவுள்ளனர்.
மேற்படி தீர்மான அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளிப்பதற்காகவே அவர்கள் இருவரும் இன்று மாலை நியூயோர்க் பயணமாகவுள்ளனர் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கை தமிழர் நலனை வலியுறுத்தி கடந் ஓகஸ்ட் மாதம் சென்னையில் திமுக சார்பில் டெசோ மாநாடு நடத்தப்பட்டது.
இதன்போது இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வாக சில தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
இந்த தீர்மானங்கள் அடங்கிய அறிக்கையினை, ஐக்கிய நாடுகள் சபையிடம் ஒப்படைக்க தி.மு.க தீர்மானித்தது.
இந்நிலையிலேயே அந்த அறிக்கை இன்று நியூயோர்க் கொண்டு செல்லப்படவுள்ளது என்று மேற்படி செய்திகள் தெரிவிக்கின்றன.
நாளை மாலை அமெரிக்கா செல்ல உள்ள இருவரும் ஐ.நா சபையில் டெசோ சார்பில் மனு அளித்து விட்டு நாடு திரும்பும் வழியில் 6.11.2012 அன்று லண்டனில் நடைபெறும் உலக தமிழ் மாநாட்டிலும் திமுக சார்பில் இருவரும் கலந்து கொள்ள உள்ளனர்.