பக்கங்கள்

பக்கங்கள்

25 அக்., 2012


விடுதலைப் புலிகளால் இனி மீளிணைய முடியாது! அரசியல் ரீதியான அழுத்தங்களை வழங்கலாம்: தயா மாஸ்டர்
தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் சுயலாபத்துக்காக இலங்கை தமிழர் விடயத்தை பயன்படுத்திக் கொள்வதாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டர் எனப்படும் தயாநிதி தெரிவித்துள்ளார்.
த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய செல்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வைகோ உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உயிருடன் இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.
இது அவர்களின் அரசியல் லாபத்துக்காக மேற்கொள்ளப்படுகின்ற சுயலாப பிரசாரமே தவிர, அதில் உண்மை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ ரீதியாக விடுதலைப் புலிகள் மீண்டும் ஒன்றிணையும் சாத்தியம் தற்போதைக்கு இல்லை.எனினும் வெளிநாடுகளில் இருந்துக் கொண்டு அரசியல் ரீதியாக இலங்கைக்கு அழுத்தங்களை அவர்களால் கொடுக்க முடியும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பும் - அரசாங்கமும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி இறுதி தீர்மானம் ஒன்றுக்கு வருவதே இந்த பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என்றும் தயாமாஸ்டர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வடக்கில் இராணுவ பிரசன்னம் அதிகரித்துள்ள என்பதையும் பொய்யான தகவல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.