பக்கங்கள்

பக்கங்கள்

16 அக்., 2012

இளைஞன், யுவதியின் சடலங்கள் மஹவ பகுதி வீட்டிலிருந்து மீட்பு
மஹவ பொலிஸ் பிரிவில் உடுகம பகுதி வீடொன்றிலிருந்து இளைஞர் மற்றும் யுவதி ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 
 

குறித்த பகுதி வீடொன்றில் இருந்து ஒருவகை துர்நாற்றம் வீசுவதாக பிரதேசவாசிகள் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர்.

அதன் பின்னர் குறித்த வீட்டுக்குச்சென்ற பொலிஸார் வீட்டினுள் இருந்து இரு சடலத்தை மீட்டுள்ளனர் 21 வயதுடைய இளைஞனும் 18 வயதுடைய யுவதியுமே சடலமாக மீட்கப்பட்டவர்களாவர்.

இவர்கள் இருவரும் குறித்த வீட்டில் வாடகைக்கு இருந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. சடலங்கள் மீதான மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை என்பன இன்று இடம்பெற்றன. மஹவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.