பக்கங்கள்

பக்கங்கள்

26 அக்., 2012


யாழில் வெளியாகும் பத்திரிகையொன்றுக்கு எதிராக இராணுவத் தளபதி வழக்குத் தாக்கல்
இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் ஜெகத் ஜயசூரிய யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிகையொன்றிற்கு எதிராக யாழ். மேல் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார்.
குறித்த பத்திரிகையிடம் இழப்பீடு கோரி அவதூறு வழக்கொன்றையே அவர் தாக்கல் செய்துள்ளதாக இராணுவத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த பத்திரிகை நான்கு மாதங்களுக்கு முன்னர், இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளருக்கு எதிராக அவதூறு ஏற்படும் வகையில் செய்தி ஒன்றை பிரசுரித்திருந்ததாகவும் அதன் பின்னரும், அந்த பத்திரிகை இராணுவத் தளபதிக்கு அவ்வாறான செய்தி ஒன்றை பிரசுரித்ததாகவும் குற்றம் சுமத்தியே இராணுவத் தளபதி ஜெகத் ஜயசூரிய இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.