பக்கங்கள்

பக்கங்கள்

27 அக்., 2012

தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க.வுக்கு போகவில்லை: விஜயகாந்த்
தமிழகத்தில் மின் உற்பத்தி திட்டங்களுக்காக முதல்வர் ஜெயலலிதா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது விஜயகாந்த் இவ்வாறு தெரிவித்தார்.
 
மேலும், தே.மு.தி.க.வில் இருந்து எந்த எம்.எல்.ஏ.வும் அ.தி.மு.க.வுக்கு போகவில்லை என்றும், தே.மு.தி.க.வைக் கண்டு பயப்படும் ஜெயலலதா எம்.எல்.ஏ.க்களை இழுப்பதற்காக நாடகம் நடத்துகிறார் என்றும் விஜயகாந்த பேசினார்.
 
முன்னதாக சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட விஜயகாந்தை சென்னை விமான நிலையத்தில் நிருபர்கள்  சந்தித்து, மக்கள் பிரச்சினைகள் பற்றி கேட்டபோது, முறையான பதில் கூறாமல் வாக்குவாதம் செய்தது குறிப்பிடத்தக்கது.