பக்கங்கள்

பக்கங்கள்

25 அக்., 2012




தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் இன்று மாலை கொழும்பில் கூடவுள்ளன.
இதன் போது கூட்டமைப்பின் கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு அமைப்பாக செயற்படுத்துவது குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகள் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தனிடம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையிலேயே இன்று கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த சந்திப்பு கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெறவிருந்த போதும், அது இன்றுவரை ஒத்திவைக்கப்பட்டது.