பக்கங்கள்

பக்கங்கள்

27 அக்., 2012


விஜயகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும்: பத்திரிக்கையாளர் மன்றம்
தேமுதிக எம்.எல்.ஏக்கள் அதிமுக விரித்த வலையில் சிக்கியபடி உள்ளனர். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பும், தேமுதிக வட்டாரத்தில் சலசலப்பும் ஏற்பட்டது.

இந்த சூழ்நிலையில் செய்தியாளர்களை அச்சுறுத்தும் விதமாகப் பேசிய விஜயகாந்த் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பத்திரிக்கையாளர் மன்றம் கோரிக்கை வைத்துள்ளது.

இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் போது, செய்தியாளர்களை சந்தித்த விஜயகாந்திடம், தேமுதிக எம்எல்ஏக்கள் முதல்வரை சந்தித்தது குறித்து கேள்வி கேட்டனர். இதனால் கோபமுற்ற விஜயகாந்த், செய்தியாளர்களை அச்சுறுத்தும் விதமாகப் பேசியுள்ளார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பத்திரிக்கையாளர் மன்றம், இதற்கான விஜயகாந்த் மன்னிப்புக் கோர வேண்டும் என்று கூறியுள்ளது.