பக்கங்கள்

பக்கங்கள்

22 அக்., 2012

சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே பாழடைந்த இரண்டு மாடி கட்டிடம் திடீரென்று இடிந்து விழுந்தது.
சென்னையில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே பாழடைந்த இரண்டு மாடி கட்டிடம் திடீரென்று இடிந்து விழுந்தது.
திருவல்லிக்கேணியில் கடந்த 4-ந்தேதி காலை சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து அதன் உரிமையாளர் தியாகராஜன், அவரது மனைவி மஞ்சு ஆகியோர் உயிரிழந்தனர். வாடகை வீட்டில் தங்கியிருந்த அமிர்தலிங்கம் என்பவரின் மனைவி பாரதி, மகன் பார்த்தசாரதி ஆகியோர் காயங்களுடன் உயிர்தப்பினர்.
 
இதேபோல் இன்று வடசென்னை பேசின் பிரிட்ஜ் அருகே ஒரு சம்பவம் நடந்துள்ளது. சென்னையில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே பாழடைந்த இரண்டு மாடி கட்டிடம் திடீரென்று இடிந்து விழுந்தது.
 
இக்கட்டிடத்தில் யாரும் குடியிருக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அசம்பாவிதம் ஏதும் ஏற்றபடவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.