பக்கங்கள்

பக்கங்கள்

5 அக்., 2012

துப்பாக்கி மீதான வழக்கை கைவிட்டது கள்ளத் துப்பாக்கி
 
கள்ளத்துப்பாக்கி படக்குழுவினர் துப்பாக்கி படத்தின் தலைப்பு மீதான வழக்கினை இன்று மீளப்பெற்றதனால் விஜயின் துப்பாக்கி தலைப்பு மீதான தடையை நீக்கியது நீதிமன்றம்.


நீண்ட நாட்களாக தலையிடியாக இருந்து வந்த இவ்வழக்கு முடிவுக்கு வந்தமையினால் துப்பாக்கி படக்குழுவினர் மற்றும விஜய் ரசிகர்கள் தங்களது மகிழ்சியினை சமூகவலைத்தளங்களினூடாக வெளியிட்டு வருகின்றனர்.

தற்போது ஏற்கனவே திட்டமிட்டது போல் படத்தினை தீபாவளிக்கு வெளியிட மும்முரமாகியுள்ளனர் துப்பாக்கி படக்குழுவினர். மேலும் படத்தின் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் ஒக்டோபர் 10ஆம் திகதி படத்தின் ட்ரெய்லர், பாடல் மற்றும் படம் வெளியீடு குறித்து தகவல்களை வெளியிட பத்திரிகையாளர்கள் சந்திப்பொன்றுக்கும் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தீபாவளிக்கு வெடிக்குமா இந்த நல்ல துப்பாக்கி?