பக்கங்கள்

பக்கங்கள்

27 அக்., 2012


தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஈழத்தமிழர் பற்றி முடிவு?
இன்று மதியம் தொடங்கிய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக அ.தி.மு.க. வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இன்று மதியம் 12 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் தொடங்கியுள்ளது.
வரும் 29-ம் தேதி, தொடங்க உள்ள சட்டப்பேரவை கூட்டத் தொடர் குறித்து இதில் விவாதிக்கப்பட உள்ளது. மேலும், நவம்பர் 30-ம் தேதி நடைபெறும் சட்டமன்ற வைர விழா தொடர்பாகவும் இதில் முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தில், ஐ.நா.வில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில், இலங்கை விவகாரம் பற்றி விவாதிக்கப்படும் போது, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலையை இந்திய அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.