பக்கங்கள்

பக்கங்கள்

2 அக்., 2012


ஐ.நா.சபையில் இந்தியா–பாகிஸ்தான் மோதல்
ஐ.நா.சபை கூட்டத்தில் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி கடந்த வாரம் பேசினார்.அப்போது அவர் தேவையில்லாமல் ஜம்மு–காஷ்மீர் பிரச்சனையை இழுத்தார்.  அப்போது அவர் பேசுகை யில், ‘‘காஷ்மீர் தோல்விகளின் சின்னமாக திகழ்கிறது.

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தின்படி, ஜம்மு–காஷ்மீர் மக்கள் தங்களது எதிர்காலத்தை அமைதியான முறையில் தேர்ந்தெடுத்துக்கொள்வதற்கு பாகிஸ்தான் தனது ஆதரவை தொடரும்’’ என்றார்.


இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலை யில், ஐ.நா.பொதுச்சபை கூட்டத்தில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். எம் .கிருஷ்ணா, சர்தாரியின் பேச்சுக்கு தக்க பதிலடி கொடுத்தார்.