பக்கங்கள்

பக்கங்கள்

5 அக்., 2012


காதலிப்பதாக கூறி சிறுமியின் வாழ்வில் விளையாடிய இளைஞன் கைது: வல்வெட்டித்துறையில் சம்பவம்
யாழ். வல்வெட்டித்துறையில் 15 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி, வல்லுறவுக்கு உட்படுத்திய இளைஞன் ஒருவரை கைது செய்துள்ளதாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.
25 வயதான இளைஞன், குறித்த சிறுமியை யாருமற்ற வீடொன்றுக்கு அழைத்துச் சென்று வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக ஒன்றும் அறியாத பெற்றோர் சிறுமியின் நடையில் மாற்றத்தை உணர்ந்தும், சிறுமியின் மனோநிலை தளர்ந்து இருப்பதையும் உணர்ந்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சிறுமியை பரிசோதித்த வைத்தியர், சிறுமி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட விடயத்தை பெற்றோருக்கு தெரியப்படுத்தினார்.
இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர். பின்னர் பொலிஸார் சந்தேகநபரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியதாக யாழ்.பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.