பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கான்சி ராமின் பிறந்தநாளையொட்டி, நாளை லக்னோவில் பிரமாண்ட பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அப்போது இது குறித்த முடிவை கட்சியின் தலைவர் மாயாவதி அறிவிப்பார் என தெரிகிறது.
நேரடி அன்னிய முதலீடு, டீசல் விலை உயர்வு ஆகிய பிரச்னைகள் தொடர்பாக மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரிணமுல் காங்கிரஸ் அண்மையில் திரும்பப்பெற்றது.
இதனைத் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியும் ஆதரவை திரும்பப் பெறும் என தகவல் வெளியாகியுள்ளது. |