பக்கங்கள்

பக்கங்கள்

24 அக்., 2012

இரா.சம்பந்தன்
கே.பி. தமிழரின் பிரதிநிதி அல்லர்-
தேசிய பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண்பதற்கான பேச்சைத் தொடங்குவதற்காக அரசின் சாதகமான சமிக்ஞையை எதிர்பார்த்திருக்கிறேன். விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளரான கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனின்
அனுசரணையுடன் புலம்பெயந்தோருடன் அரசு பேசவுள்ளதை அறிந்து நான் ஆச்சரியமடைகின்றேன். அவர் தமிழ் மக்களின் பிரதிநிதி இல்லை. இவ்வாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
 
பேச்சை மீண்டும் தொடங்குவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நிகழ்ச்சி நிரலை அரசு முன்வைக்குமாயின், பேச்சு மேசைக்கு வரவும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு அங்கத்தவர்களை நியமிக்கவும் நாம் தயாராக இருக்கின்றோம். தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேசவுள்ளதாக அரசு கூறுவது சர்வதேச சமுதாயத்தை ஏமாற்றும் தந்திரம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு 
 
நாம் அரசிடமிருந்து வெற்று வார்த்தைகளை எதிர்ப்பார்க்கவில்லை. பேச்சு தொடங்குவதற்கான நேர்மையான அணுகுமுறையையும் முழுமனதான ஈடுபாட்டையும்தான் நாம் எதிர்ப்பார்க்கின்றோம்.
 
13ஆவது, திருத்தம் நீக்கப்பட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் ஜாதிக ஹெல உறுமயவும் கூறியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதுபோன்ற பேச்சுகள் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கிவிடும்.
 
கே.பி. இலங்கையிலும் இந்தியாவிலும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர். இவரை சர்வதேச பொலிஸார் தேடி வருகின்றனர். இவருக்கு இதற்கான அதிகாரமோ, தகுதியோ இல்லை. இவர் தமிழ் மக்களின் பிரதிநிதியும் இல்லை. 
 
தமிழ் புலம்பெயர்ந்தோருடன் பேச இவரை ஒரு கருவியாக அரசு பயன்படுத்துவதன் பின்னாலுள்ள நியாயம் எமக்கு விளங்கவில்லை என்றார்.