பக்கங்கள்

பக்கங்கள்

19 நவ., 2012

தமிழ்நாடு அகதி முகாமில் 15 இலங்கை அகதிகளை காணவில்லை
தமிழ்நாடு – திருநெல்வெலி மாவட்டம் போகநல்லூர் பிரதேச முகாமில் தங்கியிருந்த இலங்கை அகதிகள் 15 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த முகாமில் 139 பேர் தங்கியிருந்ததாகவும்
அதில் 15 பேர் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அகதிகள் காணாமல் போன விவகாரம் தொடாபில் சொக்கம்பட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அகதிகள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

எனினும்இ குறித்த அகதிகள் கூலி வேலை செய்வதற்காக முகாமை விட்டு வெளியேறிதாகவும்இ ஓரிரு தினங்களில் திரும்பி விடுவார்கள் எனவும் அகதி முகாமையில் தங்கியிருப்போர் தெரிவித்துள்ளனர்.