பக்கங்கள்

பக்கங்கள்

28 நவ., 2012


மாந்திரீக கிரியைகளில் பங்கேற்ற 15 வயது சிறுவன் பலி
அம்பாறை மாவட்டத்தில் தெஹியத்த கண்டிய பிரதேசத்தில் நடைபெற்ற மாந்திரீக கிரியைகளில் பங்கேற்ற சிறுவன் ஒருவன் பரிபதாமாக கொல்லப்பட்டுள்ளான்.
பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளான். மாந்திரீகர், நோயைக் குணப்படுத்துவதாகத் தெரிவித்து சிறுவனின் வாய்க்குள் கத்தியை விட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட காயங்களினால் சிறுவன் உயிரிழந்துள்ளான்.
மேலும் மாந்திரீக கிரியைகளின் போது ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் இருவர் காயமடைந்து பொலனறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.