பக்கங்கள்

பக்கங்கள்

16 நவ., 2012


தொழில் அதிபரை மணக்கிறார் நடிகை பூஜா காந்தி
 
2003-ம் ஆண்டு திரை உலகில் காலடி பதித்த நடிகை பூஜா காந்தி, ஏராளமான கன்னட படங்களில் நடித்ததன் மூலம் கன்னட திரைப்பட ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.


தமிழ் படத்திலும் அறிமுகமானார். இது தவிர பல மலையாள படங்களிலும் அவர் நடித்துள்ளார். தண்டுபாளையா படத்தில் சங்கிலி தொடர் கொலையாளிகளில் ஒருவராக நடித்த அவர், சில காட்சிகளில் அரைநிர்வாண காட்சியில் நடித்து பரபரப்பாக பேசப்பட்டார்.
சினிமாவில் மட்டுமல்லாது சமூக சேவையிலும் அவருக்கு நாட்டம் உண்டு. ஜனதா தளம்(எஸ்) தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமியின் அழைப்பை ஏற்று பூஜாகாந்தி அரசியலில் குதித்தார்.
அதன்படி பூஜா காந்தி, ஜனதா தளம்(எஸ்) கட்சியில் சேர்ந்தார். குமாரசாமி உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு கட்சிக்காக பிரசாரம் செய்தார்.
இந்த நிலையில் பூஜா காந்தி பற்றி தவறான விமர்சனங்கள் வெளியாக தொடங்கின. இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சொந்த நலனை கருத்தில் கொண்டு கட்சியை விட்டு விலகி கொள்ளும்படி பூஜா காந்தியை குமாரசாமி கேட்டு கொண்டார்.
இதைத்தொடர்ந்து ஜனதா தளம்(எஸ்) கட்சி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் சமீப காலமாக பூஜாகாந்தி பங்கேற்காமல் இருந்தார்.
இந்த நிலையில் பூஜா காந்திக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து பைனான்ஸ் தொழில் செய்து வருபவரும், ரியல் எஸ்டேட் அதிபருமான ஆனந்த்கவுடாவுக்கும், பூஜா காந்திக்கும் திருமணம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
இதையட்டி பூஜாகாந்தி-ஆனந்த்கவுடா திருமண நிச்சயதார்த்த விழா பெங்களூர் கத்திரிகுப்பேயில் உள்ள பூஜா காந்தியின் வீட்டில் 15.11.2012 காலை நடந்தது. லட்சுமி பூஜை, நந்தி பூஜை, கணபதி பூஜை, நவகிரக பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டன. கொள்ளேகாலில் இருந்து வந்த புரோகிதர்கள் கணபதி ஹோமம் மற்றும் பூஜையை நடத்தினார்கள்.
பூஜைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் சுமார் 10.30 மணி அளவில் நிச்சயதார்த்த நிகழ்ச்சி தொடங்கியது. இதில் திரைப்பட உலகை சார்ந்தவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. பூஜாகாந்தியின் பெற்றோர், அவருடைய தங்கை மற்றும் நெருங்கிய குடும்ப நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். 
நிச்சயதார்த்தம் நடந்ததை தொடர்ந்து பூஜாகாந்தி-ஆனந்த்கவுடா திருமணம் வருகிற மார்ச் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.