பக்கங்கள்

பக்கங்கள்

29 நவ., 2012


உச்சநீதிமன்ற உத்தரவுப்படியே கர்நாடக முதல் அமைச்சரிடம் பேச பெங்களூரு செல்கிறேன்: ஜெயலலிதா
 
தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை கேட்டு பெறுவதற்காக கர்நாடக முதல் அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டரை சந்திக்க ஜெயலலிதா இன்று (29.11.2012) மதியம் பெங்களூரு புறப்பட்டு சென்றார்.
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து விமான நிலையத்திற்கு புறப்பட்ட முதல் அமைச்சர் ஜெயலலிதா செய்தியாளர்களிடம் பேசியபோது, 
காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருமாநில முதல் அமைச்சர்களும் சந்தித்துப் பேச வேண்டுமென்று அறிவுறுத்தியிருந்தது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படியே கர்நாடக முதல் அமைச்சரிடம் பேச பெங்களூரு செல்கிறேன் என்றார்.