பக்கங்கள்

பக்கங்கள்

30 நவ., 2012

சட்டப்பேரவை வைரவிழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது
தமிழக சட்டப்பேரவையின் வைரவிழா வெள்ளிக்கிழமை (30 நவம்பர் 2012) மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.குடியரசுத்தலைவர் பிரணப் முகர்ஜி
பங்கேற்கும் இந்த விழாவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலை வகிக்கிறார்.விழாவில், வைரவிழா மலர் வெளியிடப்படுகிறது. மேலும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி கட்டடத்திற்கு குடியரசுத்தலைவர் பிரணப் முகர்ஜி அடிக்கல் நாட்டுகிறார். விழாவையொட்டி சட்டமன்ற கட்டடம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக 5 ஆயிரம் காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.