பக்கங்கள்

பக்கங்கள்

6 நவ., 2012


கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள காடம்பாறை அட்டகட்டி பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் உதவி என்ஜினீயராக பணியாற்றி வந்தவர் சுப்பிரமணியம்(வயது56). இவர் அதே அலுவலகத்தில் பணியாற்றி வந்த கண்ணம்மாள் என்பவருக்கு செக்ஸ் தொல்லை கொடுத்து வந்ததாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து போலீசார், சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கைது செய்தனர். கண்ணம்மாள் புகார் அளித்ததன் மூலம், என்ஜினீயர் சுப்பிரமணியத்தின் காமலீலைகள் வெளி உலகத்துக்கு தெரியவந்தது. என்ஜினீயர் சுப்பிரமணியம், காமிரா மூலம் பதிவு செய்த ஆபாச பட சி.டி.க்கள், லேப்-டாப் கருவியில் பதிவு செய்து இருந்த ஆபாச படங்களை
போலீசார் பறிமுதல் செய்தனர் மின்சார வாரிய மாளிகை என்ஜினீயர் சுப்பிரமணியம் இதற்கு முன்பு பில்லூரில் மின்சார வாரிய கட்டுமானப்பிரிவு என்ஜினீயராக வேலை பார்த்தார். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பில்லூர் மின்சாரவாரிய அலுவலக மாளிகை, என்ஜினீயர் சுப்பிரமணியத்தின் உல்லாசபுரியாக இருந்துள்ளது. பல பெண்களை அழைத்து வந்து அங்கு உல்லாசமாக இருந்துள்ளார். மலைவாழ் பெண்கள் பில்லூர் பகுதியில் மலைவாழ் பெண்கள் அதிக அளவில் உள்ளனர். மலைவாழ் பெண்கள் வசிக்கும் பகுதிக்கு அடிக்கடி சென்று வந்த என்ஜினீயர் சுப்பிரமணியன், மலைவாழ் பெண்கள் குளிக்கும் பகுதியில் சிறிய காமிராவை பொருத்திவிட்டு சென்று விடுவார். பின்னர் இரவில் வந்து அந்த காமிராவை எடுத்துச்செல்வார். இவ்வாறு நீண்டநாட்களாக வெவ்வேறு இடங்களில் காமிராவை பொருத்தி இளம்பெண்கள் நிர்வாணமாக குளிப்பதை படம் பிடித்துள்ளார். பின்னர் இந்த படங்களை, நண்பருடன் சேர்ந்து வீடியோவில் போட்டு பார்த்து ரசிப்பதையும் வழக்கத்தில் கொண்டுள்ளார்.