பக்கங்கள்

பக்கங்கள்

26 நவ., 2012


58 வெடிகள் முழங்க சென்னையில் தமிழீழத் தேசியத் தலைவரின் 58வது பிறந்தநாள்

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 58வது பிறந்த நாளை சென்னையில் மாணவர்கள் சிலர் நள்ளிரவு 12:00 மணிக்கு கேக் வெட்டிக் கொண்டாட்டியுள்ளனர்.
தேசத் தலைவனின் பிறந்தநாளை முன்னிட்டு குறித்த நேரத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் கூடிய மாணவர்கள் தலைவருக்காக தயார்செய்யப்பட்ட கேக்கினை வெட்டி தமது சந்தோசத்தை பகிர்ந்து கொண்டனர்.
மேலும் 58 வெடிகள் முழங்கி 58வது பிறந்த நாளைக் கொண்டாடியதாக குறித்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.