பக்கங்கள்

பக்கங்கள்

26 நவ., 2012


இராணுவத்திலிருந்து 6 தமிழ் யுவதிகள் விலகியுள்ளனர்: இராணுவ பேச்சாளர்
கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்ட 109 தமிழ் யுவதிகளில் 6 பேர் சுய விருப்பத்தின்பேரில் விலகிச் சென்றுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
கடந்த 17ம் திகதி நான்கு பேரும், 18ம் திகதி இரண்டு பெண்களும் இராணுவத்திலிருந்து விலகியுள்ளனர்.
6 தமிழ் யுவதிகளும் தங்களது சுயவிருப்பின் பேரிலே விலகியுள்ளனர். இராணுவத்திலிருந்து தப்பிச் செல்லவில்லை. அவர்களின் பெற்றோரே நேரில் வந்து அவர்களை அழைத்துச் சென்றுள்ளனர் என இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டார்.
குறித்த தமிழ் யுவதிகள் கடந்த 17ஆம் திகதி இராணுவத்தில் இணைந்துகொள்ளப்பட்டனர்.
இதேவேளை, தமிழ் யுவதிகள் அலுவலக வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக பொய் கூறியே இராணுவத்தில் சேர்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.