பக்கங்கள்

பக்கங்கள்

9 நவ., 2012


புலம்பெயர் தமிழர் 63 பேர் தமிழகத்திலிருந்து நாடு திரும்பல்
யுத்தம் காரணமாக இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்து தமிழக முகாம்களில் வசித்து வந்த ஈழத்தமிழர்களுள் 63 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர்.


யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு பகுதிகளிலிருந்து புகலிடத் தஞ்சம் கோரி, தமிழகத்துக்குச் சென்ற இவர்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல். 132 என்ற சிறப்பு விமானத்தின் மூலம் இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு நாடு திரும்பியோர் யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தோர் என்பது குறிப்பிடத்தக்கது.