பக்கங்கள்

பக்கங்கள்

7 நவ., 2012

பூரண மதுவிலக்கை அமுல்படுத்தக்கோரி மதுரையில் ம.தி.மு.க.வினர் இன்று ஆர்ப்பாட்டம்
ழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த கோரி மதுரையில் இன்று ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மீனாட்சி பஜார் ஸ்காட் ரோட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. 


இதற்கு மாவட்ட செயலாளர் புதூர் பூமிநாதன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் சின்ன செல்லம், பொருளாளர் முத்தையா, துணை செயலாளர் மனோகரன், மகபூப் ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ரஞ்சித்குமார், சுருதி ரமேஷ் உள்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர். 

வீதிகள் தோறும் மதுக் கடைகள், விழுந்து கிடப்பது தமிழன் நிலைமை. இழுத்து மூடு... இழுத்து மூடு... மதுக்கடைகளை இழுத்து மூடு..., மது உள்ளே போனால் மதி வெளியே போகும் உள்பட பல கோஷங்களை எழுப்பினர்.