பக்கங்கள்

பக்கங்கள்

16 நவ., 2012

புதுக்காட்டில் வாகன விபத்து யாழ். மறைமாவட்ட குரு பலி
யாழ்ப்பாணம் புதுக்காட்டு சந்திப்பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு இடம் பெற்ற வாகன விபத்தில் யாழ். மறைமாவட்ட குருவான கே. லக்மன் உயிரிழந்துள்ளார். விபத்தில் சிக்கிய இவர்
படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 1.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

யாழ். மறைமாவட்ட குருவான இவர் எழுவை தீவைச் சேர்ந்தவராவார். கடந்த இரண்டு ஆண்டுகளாக மறைமாவட்ட குருவாக இவர் பணியாற்றி வந்துள்ளார். இவரது மறைவு யாழ். மறைமாவட்டத்திற்கு பேரிழப்பாகும் என்று யாழ். மறைமாவட்டத்தினர் விடுத்த அனுதாப் செய்தியில் தெரிவித்துள்ளனர்.