பக்கங்கள்

பக்கங்கள்

3 நவ., 2012


நடிகை ஐஸ்வர்யாராய்க்கு பிரான்ஸ் நாட்டு விருது


டிகை ஐஸ்வர்யாராய்க்கு கலை சேவையை பாராட்டி பிரான்ஸ் நாட்டு சார்பில் மும்பையில் நடந்த அவரது பிறந்த நாள் விழாவில் விருது வழங்கப்பட்டது.

முன்னாள் உலக அழகியும், பிரபல நடிகையுமான 39 வயது ஐஸ்வர்யா ராய்க்கு அவரது கலை சேவையை பாராட்டி பிரான்ஸ் நாடு விருது வழங்க முடிவு செய்தது. இந்த விருது மும்பை பாந்திரா குர்லா வளாகத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த ஐஸ்வர்யா ராயின் பிறந்த நாள் விழாவில் வழங்கப்பட்டது. இது அந்த நாட்டின் 2–வது உயரிய விருதாகும். இந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராயின் கணவர் அபிஷேக் பச்சன், மாமனார் அமிதாப் பச்சன், பிரான்ஸ் நாட்டுக்கான இந்திய தூதர் பிரான்கோயிஸ் ரிச்சியர் கலந்து கொண்டனர்.

இந்த விருது கிடைத்தது தொடர்பாக அமிதாப் பச்சன் கருத்து தெரிவிக்கையில், ‘‘ஐஸ்வர்யா ராய் பிறந்த நாள் கொண்டாடும் நேரத்தில் அவரை பிரான்ஸ் நாடு அங்கீகரித்து கவுரவித்து உள்ளது. அவரது கலை சேவையை பாராட்டி விருது வழங்கி உள்ளனர். பல ஆண்டுகளுக்கு முன்பு அந்த நாட்டின் மிக உயரிய ‘கவுரவ குடியுரிமை’ விருதை எனக்கு வழங்கியது. தற்போது எங்களது குடும்பத்தை 2–வது முறையாக அங்கீகரித்து பிரான்ஸ் நாடு கவுரவித்து உள்ளது’’ என்றார்.

இந்த விழாவில் ஐஸ்வர்யா ராய் தனது ஒரு வயது பெண் குழந்தை ஆராத்யாவுடன் கலந்து கொண்டார். விழா அரங்கத்துக்கு நுழையும் போது குழந்தையை அவர் வைத்திருந்தார். ஐஸ்வர்யா ராய் விருது பெற்றபோது குழந்தையை அபிஷேக் பச்சன் கவனித்து கொண்டார். அழுதப்படியே இருந்த அந்த குழந்தை பார்வையாளர்களை கவரும் வகையில் இருந்தது.