பக்கங்கள்

பக்கங்கள்

21 நவ., 2012


யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை மற்றும் வேலணைப் பகுதிகளில் பொழுது சாயும் வேளையில் பிரதான வீதிகளில் நிற்கும் இரு காக்கியுடை தரித்த ‘மன்மதராசாக்கள்’ மோட்டார் சைக்கிளில் செல்லும் இளம் பெண்களை வழிமறிக்கின்றனர்.
அவர்களை வழிமறித்து சோதனை என்ற பெயரில் நீண்ட நேரம் காக்க வைத்து அசடு வழியும் இந்த இரு இளசுகளும் ‘மன்மத லீலை’களைக் காட்ட முனைகின்றனர் என்று பெண்கள்
குற்றம்சாட்டுகின்றனர்.
கடமை முடிந்து வீடுகளுக்குச் செல்லும் பெண்களை சாரதி அனுமதிப் பத்திரம் காப்புறுதிப் பத்திரம் போன்றவற்றை கேட்டு வாங்கி நீண்டநேரம் காக்க வைக்கின்றனர் என்று அரச உத்தியோகத்தரான ஓர் இளம் பெண் வருத்தத்துடன் தெரிவித்தார்.
இவ்வாறான நிலைமை நீடித்தால் வடக்கின் பிரதிப் காவல்துறை அதிபரிடம் தாம் நேரில் முறையிடப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார். இரு ‘மன்மதராசாக்’களும் ஊர்காவற்றுறை காவல்துறை நிலைய போக்குவரத்துப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களின் இலக்கங்களை குறித்து வைத்திருக்கிறோம் என்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகின்றனர்.