பக்கங்கள்

பக்கங்கள்

17 நவ., 2012



கூடங்குளம் அணுமின் நிலையத்தினால் வடபகுதி தழிழர்களுக்கு ஆபத்து என்றும் இந்திய அரசிற்கு எதிராகவும் யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டுள்ளது.
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தது. இன்று காலை 11 மணியளவில் யாழ்.பஸ்தரிப்பு நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன்போது அணுஉலையினால் இலங்கைக்கு ஏற்படப்போகும் பாதிப்புக்களை வெளிப்படுத்தும் முகமாக துண்டுப் பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
மேலும் இந்தியாவில் அணுஉலைக்கு எதிராகப் போராடிவரும் இடிந்தகரை மக்களுக்கு தாம் ஆதரவு அளிப்பதாகவும் இப்போராட்டத்தில் கோஷம் எழுப்பட்டது.
புதுடெல்லிக்கு அபிவிருத்தி, தமிழ்நாடு - இலங்கைக்கு சுடுகாடு, அணுஉலை கதிரியக்கம் கொடிய புற்றுநோயையும் அங்கவீனப் பிறப்பையும் கொண்டுவரும், பல்தேசியக் கம்பனிகளுக்கு 1000 ஆயிரம் மெகாவாட் மின்சாரம், பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உயிர் அபாயம் போன்ற வாசகங்கள் எழுத்தப்பட்டிருந்தன.