பக்கங்கள்

பக்கங்கள்

14 நவ., 2012

பிரதம நீதியரசருக்கு எதிரான அரசியல் குற்றப்பிரேரணை தொடர்பான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட தெரிவுக்குழு இன்று முற்பகல் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
11 பேரடங்கிய நாடாளுமன்ற தெரிவுக்கு அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாபா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தவிர நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, ராஜித்த சேனாரத்ன, டிலான் பெரேரா, விமல் வீரவங்ச, நியோமல் பெரேரா ஆகிய அமைச்சர்கள் ஆளுங்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் உறுப்பினர்களாக பணியாற்றவுள்ளனர்.
எதிர்கட்சி சார்பாக ஜோன் அமரதுங்க, லக்ஷ்மன் கிரியெல்ல, ஆர். சம்பந்தன் மற்றும் விஜித ஹேரத் ஆகியோர் விசாரணைகளுக்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கத்துவம் வகிக்கின்றனர்.
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக 117 ஆளும் தரப்பு எம்.பி.க்களின் கையொப்பத்துடன் கூடிய குற்றப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.
அத்துடன்  பாராளுமன்ற தெரிவுக் குழுவின் விசாரணைகள் அனைத்தும் ஒருமாத காலப்பகுதியினுள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.