பக்கங்கள்

பக்கங்கள்

13 நவ., 2012

ஏ.டி.பி. உலக டென்னிஸ்: பூபதி-போபண்ணா ஜோடி இறுதிப்போட்டியில் தோல்வி
ஏ.டி.பி. உலக டென்னிஸ் போட்டியில் இந்திய இரட்டையரான மகேஷ் பூபதி-ரோகன் போபண்ணா, நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் தோல்வியை தழுவினார்கள்.


ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மார்க்கெல் கிரானோலர்ஸ்-மார்க் லோபெஸ் ஜோடி, இந்திய வீரர்களுடன் ஆவேசமாக விளையாடியது.

90 நிமிடங்கள் நீடித்த விறுவிறுப்பான ஆட்டத்தில், 5-7, 6-3, 3-10 என்ற கணக்கில் ஸ்பெயின் வீரர்கள் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்கள்.

ஏ.டி.பி. உலக டென்னிஸ் இறுதிப்போட்டி வரை 5 முறை முன்னேறிய இந்திய வீரர்கள் ஒரு முறை கூட வெற்றிக்கனியை சுவைத்ததில்லை. இதில், மகேஷ் பூபதி-ரோகன் போபண்ணா ஜோடி மட்டும் 3 முறை அரை இறுதியை கடந்து இறுதிப்போட்டியில் பங்கேற்றும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.