பக்கங்கள்

பக்கங்கள்

6 நவ., 2012


செல்வம் அடைக்கலநாதனின் மைத்துனரை கொலை செய்ததாக ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார்?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் மைத்துனரான சின்னத்துரை இந்திரேஸ்வரன் என்பவரை கொலை செய்ததாக ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
சக நண்பர் ஒருவரே இந்தக் கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
தங்க நகை வியாபார முகவராக செயற்பட்டு வந்த 53 வயதான சின்னத்துரை இந்திரேஸ்வரன் கடந்த 30ம் திகதி கொலை செய்யப்பட்டார்.
இவரது சடலம் நானுஓயா பிரதேசத்தில் கடந்த 31ம் திகதி மீட்கப்பட்டது.
பணத்தைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் தாம் இந்தக் கொலையை செய்ததாக செட்டியார் தெருவில் தங்க நகை வியாபார முகவராக செயற்பட்டு வரும் யூசுப் என்பவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்திரேஸ்வரனிடமிருந்து 35 லட்ச ரூபா பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக இந்தக் கொலையை செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
கார் ஒன்றில் இந்திரேஸ்வரனை அழைத்துச் சென்று கழுத்தை நெரித்து கொலை செய்ததாக யூசுப் தெரிவித்துள்ளார்.
இந்திரேஸ்வரனின் சடலத்தை நானுஓயா பிரதேசத்தில் போட்டுவிட்டு மீண்டும் கொழும்பு திரும்பியதாக யூசுப் பொலிஸ் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.
கொள்ளையிட்ட பணத்தில் ஐந்து லட்ச ரூபா கடன்களை செலுத்தியதாகவும், மிகுதிப் பணத்தை வாகனமொன்றை கொள்வனவு செய்வதற்காக செலுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.