பக்கங்கள்

பக்கங்கள்

11 நவ., 2012

சுவிட்சர்லாந்தில் பணியிட வேறுபாட்டுணர்வு புதிய பிரச்னையாக முளைத்துள்ளதாக, இனபேதத்துக்கு எதிரான மத்தியக் கூட்டாணையம் நடத்திய புதிய ஆய்வு புலப்படுத்தியது.
இவர்கள் சுவிட்சர்லாந்தில் படித்துப் பட்டம் பெற்றிருந்தாலும் இதே நிலைதான் நீடிக்கிறது. இவர்களுக்கு அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், சமூக நல அமைப்புகள் போன்ற நல்ல இடங்களில் வேலை கிடைப்பதில்லை
.
தென்கிழக்கு ஐரோப்பா, போர்ச்சுகல், துருக்கி போன்ற நாடுகளில் இருந்து வந்த கூடுதல் தகுதி பெற்ற பணியாட்களுக்குக் கூட படிப்புக்கேற்ற வேலை கிடைப்பதில்லை.
அதே சமயத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் புலம்பெயர்ந்தோருக்குத் தகுதி அடிப்படையில் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலையை வழங்குகின்றன. இவர்களுக்கு அத்தகைய நிறுவனங்களில் இனவேறுபாடு காட்டப்படாததால் வேலை பார்ப்பதில் மகிழ்ச்சியும் மனநிறைவுத் ஏற்படுகின்றது.
சுவிஸ் நாட்டு இளைஞர்களை விட மூன்று மடங்கு புலம்பெயர்ந்தோர் வேலையில்லாத் திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2011 கணக்கின்படி உயர்தகுதி புலம்பெயர்ந்தோர் புலம்பெயர்ந்து வந்தவர்களில் 46 சதவீதம் பேர் ஆவர்.
கடந்த 2010ம் ஆண்டில் துருக்கி, போர்ச்சுகல் நாடுகளிலிருந்து வந்த உயர்தகுதி பெற்றவர்கள் 5 சதவீதம் வேலையில்லாத் திண்டாட்டத்தை சந்தித்த போது சுவிஸ் நாட்டு இளைஞர் 1.5 சதவீதம் பேர் மட்டுமே வேலையின்றி இருந்தனர்.