பக்கங்கள்

பக்கங்கள்

16 நவ., 2012


பாதுகாப்பு தருமாறு தமிழக அரசிடம் நடிகர் விஜய் கோரிக்கை
தங்களது வீடுகளுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி கோரி நடிகர் விஜய் மற்றும் கலைப்புலி தாணு மனு கொடுத்துள்ளனர்.நடிகர் விஜய் நடித்து வெளியாகியுள்ள துப்பாக்கித் திரைப்படம் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்திருப்பதாகக் கூறி பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று விஜய்யின் வீட்டை முற்றுகையிடச் சென்ற இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
 

இந்த நிலையில், இன்று (15.11.2012) தமிழக உள்துறை செயலரை நேரில் சந்தித்த விஜய் மற்றும் கலைப்புலி தாணு, தங்களது வீடுகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரி மனு கொடுத்துள்ளனர்.