பக்கங்கள்

பக்கங்கள்

4 நவ., 2012

இலங்கை நீதித் துறை மீதான அழுத்தங்கள் தொடர்பில் அமெரிக்கா கவனம்
இலங்கை நீதித் துறைக் கட்டமைப்பு மீதான அழுத்தங்கள் தொடர்பில் கண்காணிக்கப்பட்டு வருவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்டோரியா நுலண்ட் அம்மையார் தெரிவித்துள்ளார்.
பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம்
குறித்து அமெரிக்கா கவனம் செலுத்தி வருகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் நீதிமன்றக் கட்டமைப்பின் மீதான அழுத்தங்கள் குறித்து கருத்து வெளியிட்ட நீதவான் ஒருவர் தாக்கப்பட்டிருந்ததாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர்,

சுயாதீன நீதிமன்றக் கட்டமைப்பிற்கு குந்தகம் ஏற்படும் வகையில் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுப்பது பொருத்தமற்றது என இலங்கை அரசாங்கத்திடம் கோருவதாகத் தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கு, ஜனநாயகம், குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.