பக்கங்கள்

பக்கங்கள்

9 நவ., 2012

நோர்வேயிலுள்ள வெளிநாடுகளைச் சேர்ந்தோர் ஜெனீவாவில் உண்ணாவிரதத்திற்கு முஸ்தீபு
நோர்வே சிறுவர் காப்பகம், நோர்வே சிறுவர் விவகார அமைச்சு, நோர்வே நீதிமன்றங்கள் மற்றும் நோர்வே அரசாங்கம் ஆகிய நான்கு தரப்புகளும் தம்மை ஏமாற்றி தமது குழந்தைகளை பலவந்தமாக பிரித்து வைத்திருப்பதாக தெரிவித்துள்ள நோர்வேயில் உள்ள வெளிநாடுகளைச்
சேர்ந்த பெற்றோர் ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய உள்ள அதேவேளை, ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்கு முன்பாக சாகும்வரையில் உண்ணாவிரதப் போராட்டமொன்றை நடத்துவதற்கு தயாராகி வருதாக தெரியவந்துள்ளது.
நோர்வேயில் வதிவிட உரிமை பெற்;றுள்ள ஈரான், ஈராக், ர~;யா, கானா, போலந்து, ஹொங்கொங், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெற்றோரே இவ்வாறு நோர்வே தொடர்பில் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையிடம் நியாயம் கேட்டும் தமது பிள்ளைகளை பெற்றுத்தருமாறு வலியுறுத்தியும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தமக்கும் தமது குழந்தைகளுக்கும் ஏற்பட்டுள்ள நிலைமை, மனித உரிமை மீறல் மற்றும் அடிப்படை மீறல் தொடர்பில் ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு தீர்மானித்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் நோர்வேயில் வெளிநாட்டவர்கள் மீது இனவாதம் மேலோங்கி காணப்படுவதாகவும் குழந்தைகளை காப்பகத்திடம் பறிகொடுத்து தவிக்கின்ற பெற்றோர் பழிவாங்கப்படுவதாகவும் பாதிக்கப்பட்டுள்ள பெற்றோர் தெரிவிக்கின்றனர்.