பக்கங்கள்

பக்கங்கள்

26 நவ., 2012


மாஜி திமுக அமைச்சர் செல்வராஜ் மரணம்
முன்னாள் தி.மு.க.அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜ் உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த தி.மு.க. ஆட்சியின் போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் சமயநல்லூர் செல்வராஜ்.

 இவர் உடல்நலக்குறைவால் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி இறந்தார். செல்வராஜ் மறைவிற்கு தி.மு.க. சார்பில் கனிமொழி, ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.