பக்கங்கள்

பக்கங்கள்

7 நவ., 2012




முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக மனித எலும்புக் கூடுகள் மீட்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
இறுதி யுத்தத்தின் போது புதைக்கப்பட்ட சடலங்களின் எலுப்புக் கூட்டுத் தொகுதி ஒன்று நேற்று மீட்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு அம்பலவன் பொக்கணை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையை அண்மித்த பகுதியில் இவை மீட்கப்பட்டுள்ளன.

அப்பகுதி மக்கள் தமது உடமைகள் புதைத்து வைக்கப்பட்ட இடங்களில் மீண்டும் தேடும் போது குறித்த எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளது.
அண்மையில் முல்லைத்தீவு அம்பலசன் பொக்கணை மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்னர். இதன்  பின்னர் அப்பிரதேச பாடசாலையும் இயங்க ஆரம்பித்துள்ளது.
தரப்பாள் ஒன்றினால் சுற்றப்பட்ட நிலையில் புதைக்கப்பட்ட சடலம் ஒன்றின் எலும்புக் கூடே மேற்படிச் சம்பவத்தில் மீட்கப்பட்டுள்ளது.
இறுதி யுத்தத்தில் இறந்தவர்களுடைய எலும்புக் கூடுகளக இது இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.