பக்கங்கள்

பக்கங்கள்

27 நவ., 2012


விசாரணைக்கு வருமாறு சிறிதரன் எம்.பி. க்கு அழைப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனை விசாரணக்கு வருமாறு குற்றத் தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.
நாளை காலை 10:00 மணிக்கு கொழும்பு குற்றத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் சமுகமளிக்குமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் தமிழ்ப் பெண்களை இராணுவத்தில் இணைத்தமை தொடர்பாக சிறிதரன் எம்.பி ஊடகங்களுக்கு கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். பி.பி.சி. க்கு அளித்த செவ்வி தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு வருகைதருமாறு குற்றத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சியில் 109 தமிழ்ப் பெண்கள் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டமை தொடர்பில் பாராளுமன்றத்திலும் சிறிதரன் எம்.பி உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்