பக்கங்கள்

பக்கங்கள்

3 நவ., 2012


கைதியின் குத வாயிலில் இருந்து ஒலியெழுப்பிய தொலைபேசி
கைதியொருவரின் குத வாயிலில் இருந்து கையடக்க தொலைபேசிகள் ஒலியெழுப்பியதையடுத்து, பொலிஸார் குறித்த சந்தேக நபரை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து கைதியொருவரை வவுனியா நீதிமன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.


இதன்போது குறித்த கைதியிடம் இருந்து கையடக்க தொலைபேசியின் ஒலி எழும்பியுள்ளது. இதை அவதானித்த பொலிஸார் கைதியின் மலவாயிலில் இருந்து ஒலி வருவதை அறிந்துள்ளனர். இதன்போது கைதி அவஸ்த்தைபட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த கைதியின் மலவாயிலில் இரு கையடக்க தொலைபேசிகள் இருப்பதாக சந்தேகித்த பொலிஸார், கைதியை சத்திர சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.