பக்கங்கள்

பக்கங்கள்

30 நவ., 2012


அவுஸ்திரேலிய அணி முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங் ஓய்வு


அவுஸ்திரேலியா கிரிக்கெட் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். தென்னாபிரிக்காவிற்கு எதிராக பேர்த்தில் நடைபெற உள்ள 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன், தாம் ஓய்வு பெற
போவதாக பொண்டிங் அறிவித்துள்ளார். ஓய்வு பெறும் முடிவை தாமாகவே எடுத்ததாக ரிக்கி பொண்டிங் விளக்கமளித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் சரியாக விளையாடாததால், ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளதாக ரிக்கி பொண்டிங் கூறியுள்ளார்.
ரிக்கி பொண்டிங் ஓய்வு பெறும் முடிவு பற்றி டுவிட்டரில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் தகவல் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்பவர் ரிக்கி பொண்டிங் ஆவார். பொண்டிங் இதுவரை 167 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13,366 ஓட்டங்கள் குவித்துள்ளார்.