பக்கங்கள்

பக்கங்கள்

12 நவ., 2012


சென்னை திரும்பினார் ஸ்டாலின்

சென்னையில் நடந்த டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஐ.நா. சபையில் உள்ள மனித உரிமைகள் கழகத்தில் அளித்துவிட்டு 11.11.2012 சென்னை திரும்பிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் திமுக தலைவர் கலைஞர், பொதுச்செயலாளர் அன்பழகன் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர். மத்திய மந்திரிகள் ஜெகத்ரட்சகன், பழனிமாணிக்கம் மற்றும் கனிமொழி எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரை முருகன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கதங்கம் தென்னரசு, முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விமான நிலையத்திற்குச் சென்று, திமுக பொருளாளர் ஸ்டாலினை நேரில் வரவேற்றனர்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுடன், திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி,ஆர்.பாலுவும் வந்தார். கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி ஸ்டாலினும், டி.ஆர்.பாலுவுடன் சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றனர்.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நகலை, நியூயார்க்கில் உள்ள ஐ.நா. மன்றத்திலும், மனித உரிமை ஆணையத்திடமும் அவர்கள் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து பிரிட்டானியா உலகத் தமிழர் பேரவை சார்பில் லண்டனில் நடைபெற்ற உலகத் தமிழர்கள் பாதுகாப்பு மாநாட்டில் ஸ்டாலினும் பங்கேற்று பேசினார்.