பக்கங்கள்

பக்கங்கள்

7 நவ., 2012


நட்ட ஈடு கோரக்கூடாது!- பொது மக்களை வற்புறுத்தி பத்திரங்களில் கையெழுத்து வாங்கிய கடற்படை
யாழ். பொன்னாலையில் கடற்படையினர் அபகரித்து வைத்திருந்த வீடுகளுக்கு நட்டஈடு கோரக்கூடாது என தெரிவித்த கடற்படையினர், பொது மக்களிடம் வற்புறுத்தி பத்திரங்களில் கையெழுத்து வாங்கியுள்ளனர்.
பொன்னாலையில் கடற்படையினர் வசமிருந்த ஒருபகுதி இடம்பொது மக்களின் மீள்குடியேற்றத்திற்காக 20 வருடங்களின் பின்னர் நேற்று விடுவிக்கப்பட்டது. இதன்போது கடற்படையினர் சுவீகரித்து வைத்திருந்த பொதுமக்களின் 19 வீடுகளும் விடுவிக்கப்பட்டன.
இதற்கான நிகழ்வு நேற்று பொன்னாலையில் நடைபெற்றது. இதன்போது நீங்கள் எமக்கு கையளித்த வீடுகளை நாங்கள் உங்களிடம் மீண்டும் கையளிக்கின்றோம்.
கடற்படையினர் பாவித்த வீடுகளுக்கு நட்டஈடு கோரக்கூடாது என பொது மக்களிடம் கடற்படையினர் பத்திரங்களில் கட்டாயப்படுத்தி எழுதி வாங்கியுள்ளனர்.
இதன்போது, ஏன் இவ்வாறு கையெழுத்து வாங்குகிறீர்கள் என்று பொது மக்கள் சந்தேகமடைந்து கடற்படையினரிடம் வினவியபோது, அங்கிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொது மக்களை சமாளித்து இது கடற்படையினரின் கடமை உங்களுக்கு நட்ட ஈடு பெற்றுக்கொள்ள இதுதடையில்லை என்று தெரிவித்தார்.
இதேவேளை இவ்வாறானதொரு பத்திரத்தில் பொது மக்கள் கையெழுத்திட்டால் மீண்டும் நட்டஈடு கோரமுடியாது என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.