பக்கங்கள்

பக்கங்கள்

23 நவ., 2012


திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சென்னையில் காலமானார்
   திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75.1957ஆம் ஆண்டு முதல் திமுக உறுப்பினராக இருந்து வந்தவர் வீரபாண்டி ஆறுமுகம். 1970ல் பூலாவாரி ஊராட்சி தலைவராக பதவி வகித்தவர். 1962, 67, 71, 89, 96, 2006 ஆண்டுகளில் எம்எல்வாக தேர்வு செய்யப்பட்டவர். 1978 முதல் 84 வரை தமிழக சட்டமேலவை உறுப்பினராக பதவி வகித்தவர். 4 முறை வேளாண், ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர். 1989-90ல் ஊராக மேம்பாடு, உள்ளாட்சித் துறை அமைச்சராக ஆறுமுகம் இருந்தார். 1990-91, 96-2001,2006-2011ல் வேளாண் துறை அமைச்சராக இருந்தார். 
 
கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் 23.11.2012 வெள்ளிக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.