பக்கங்கள்

பக்கங்கள்

12 நவ., 2012


இலங்கையில் பொதுவாக்கெடுப்பு : கருணாநிதி வலியுறுத்தல்

இலங்கையில் ,பொது வாக்கெடுப்பு நடத்த இந்தியா அழுத்தம் தர வேண்டும். இதற்கு, மத்திய அரசு உறுதுணையாக இருந்தால் தான், நாமும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க முடியும், என்று, தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைமுகமாக மத்திய

அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார் டெசோ மாநாட்டு தீர்மான நகலை ஐ.நா., சபையில் வழங்கி விட்டு, நேற்று சென்னை வந்த, திமுக பொருளாளர், ஸ்டாலின், டி.ஆர்.பாலு ஆகியோருக்கு பாராட்டுவிழா, சென்னை அறிவாலயத்தில்நடந்தது. விழாவில்,திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது:டெசோ குழந்தை வளரத் துவங்கிய காலகட்டத்தில், இலங்கை தமிழர்களுக்கு விடிவு ஏற்படாதா என்ற ஏக்கத்தோடு, ஐ. நா., சபையிடம், ஸ்டாலினும், பாலுவும் டெசோமாநாட்டு தீர்மானங்களை வழங்கியுள்ளனர்.இலங்கை தமிழர்களை சுயமரியாதையுடன் வாழ்வதற்கு, எவ்வளவு அழுத்தம் கொடுக்கவும், தி.மு.க., தயாராக இருக்கிறது.இலங்கை தமிழர்களுக்கு விடிவு காலம் வர, பொது வாக்கெடுப்பு நடத்த ஐ.நா., சபையை தயார் படுத்த வேண்டும். இந்தியாவும், அழுத்தம் கொடுக்க வேண்டும். அதற்கு, மத்திய அரசு உறுதுணையாக இருந்தால் தான், நாமும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க முடியும் . இவ்வாறு கருணாநிதி பேசினார்