வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது தப்பிச் சென்ற கைதிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தெஹியோவிட்ட பகுதியில் வைத்து ருவன்வெல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட குறித்த நபர் கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.