பக்கங்கள்

பக்கங்கள்

30 நவ., 2012

மூன்றரை வருடங்களின் பின்னர்  ஐ.நா சபையின் அதிகாரிகள் முள்ளிவாய்க்கால் மக்களைச் சந்தித்து கலந்துரையாடியதுடன் அவர்களது குறைகளையும் கேட்டு அறிந்து கொண்டனர்..
கடந்த 27 ஆம் திகதி வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொண்ட ஐ.நா அதிகாரிகள் யாழ். குடாவிற்கு விஜயத்தினை மேற்கொண்டு யாழ் ஆயர் இல்லத்தில் ஆயரைச் சந்தித்து யுத்தத்திற்குப் பின்னரான நிலவரம் குறித்தும் கேட்டு அறிந்து கொண்டனர்.


.
அதனையடுத்து இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்ற பகுதியான முள்ளிவாய்க்கால் பகுதிக்குச் சென்ற ஐ.நா அதிகாரிகள் அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுடனும் கலந்துரையாடினர்.
.
அத்துடன் யுத்தத்திற்குப் பின்னர் உள்ள நிலமைகளை கேட்டறிந்தனர். அதன்போது தாங்கள் மீள்குடியேற்றப்படும் போது தங்களுக்கு போதியளவான வசதிகள் செய்து தரப்படவில்லை. தகரக் கொட்டகைகளே வழங்கப்பட்டுள்ளன.
.
அத்துடன் தென்னிலங்கையில் இருந்து வரும் இரும்பு வியாபாரிகளால் தாம் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாவதாகவும் இதற்கு இராணுவத்தினர் உடந்தையாக இருப்பதனால் இராணுவத்தினருக்கும் எமக்கும் இடையில் முறுகல் நிலை காணப்படுகின்றது இது பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் எனவும் ஐ.நா அதிகாரிகளிடம் மக்கள் எடுத்துக் கூறினர்.
.
இவற்றை கேட்ட அதிகாரிகள் நாம் உங்கள் உணர்வுகளை மதிக்கின்றோம். உங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண நாம் நடவடிக்கை எடுக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதன் போது வருகை தந்திருந்த ஐ.நா சபையின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய அரசியல் விவகாரச் செயலாளர் ஹிட்டோக்கி டென் மற்றும் யங்குவான்லீ ஆகியோர் முல்லைத்தீவு அரசாங்க அதிப