பக்கங்கள்

பக்கங்கள்

4 நவ., 2012

சட்டவிரோதமாக அமெரிக்க டொலர்களைக் கடத்திய இருவர் கைது
சட்டவிரோதமாக அமெரிக்க டொலர்களை கடத்திச் செல்ல முற்பட்ட பொரளை மற்றும் சிலாபம் பகுதிகளைச் சேர்ந்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.மாலைத் தீவுக்குச் செல்வதற்காக வந்த இவர்களது பையில் 30 இலட்சம் ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதஇச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.