பக்கங்கள்

பக்கங்கள்

27 நவ., 2012


ஈழ தமிழர்களுக்கு எல்லாளன் படையின் வேண்டுகோள்
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் எல்லாளன் படை ஒரு அறிக்கை விடுத்துள்ளது. அவ்வறிக்கையில்,
’’எமது விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்து விட்டதாக
இலங்கை அரசு கடந்த 3 வருடங்களாக கூறி வருகின்றது என்றாலும் நாம் தொடர்ந்து சர்வதேசத்திற்கான ஒரு தெளிவான பதிலை வழங்கி வருகின்றோம். இதன் அர்த்தம் எமது நீண்ட விடுதலைப் போராட்டம் முடிந்து விட்டது என்று அர்த்தம் அல்ல.

அன்பான எமது உறவுகளே. இலங்கை பேரினவாத அரசு எம்முடன் தனித்து நின்று யுத்தம் புரிந்து இருந்தால் நாம் முழு தமிழீழத்தையும் எமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் சமபல நிலையில் இருந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். 
ஆனால் இலங்கை பேரினவாத அரசு பல உலக நாடுகளின் துணை கொண்டு எமது விடுதலைப் போரை இவ்வாறான இன்றைய சூழலுக்கு இட்டுச் சென்றுள்ளது. இருந்தும் எமது மக்களுக்கான நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக சர்வதேச நாடுகளுக்காக எமது ஆயுதங்களை நாம் மௌனிப்பதாக அறிவித்து இருந்தோம்.
இதன் அர்த்தம் நாம் தோல்வி அடைந்து விட்டோம் என்றோ எமக்கான விடுதலைப் போராட்டம் முடிக்கப்பட்டதென்றோ அர்த்தம் அல்ல. அன்பான எம் உறவுகளே பல ஆயிரம் மாவீரர்களினதும், பல ஆயிரம் பொதுமக்களினதும் தியாகத்தில் இருந்தும், புலம்பெயர் தமிழர்களின் கடும் உழைப்பில் இருந்தும் பெறப்பட்ட போர் ஆயுதங்கள் இலங்கை, தமிழீழப் பகுதி எங்கும் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். 
இருந்தும் இன்றைய சுழல் நிலையில் பல பகுதிகளில் புனரமைப்பு மீள் குடியேற்றம் என்ற போர்வையில் துப்புரவு பணிகள் நடந்து வருவதை நாம் அறிவோம். அத்துடன் எமது போர் தளவாடங்களை காட்டிக் கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என இலங்கை ராணுவம் கடந்த சில நாட்களாக அறிவித்தல்களை விடுத்து வருகின்றது. 
இவ்வாறான சூழ்நிலையில் எமது போர் ஆயுதங்கள், இயக்க உடைமைகள், ஆவணங்கள் காணப்படும் இடத்து அவற்றை ராணுவத்தினருக்கு தெரியப்படுத்தி காட்டிக் கொடுக்காமல் உரிய முறையில் பேணி பாதுகாத்து காலச்சுழலில் உங்களுக்கான தொடர்புகள் உருவாகின்றபோது உரியவர்களிடம் ஒப்படைக் குமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்’’என்று கூறப்பட்டுள்ளது.